டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கட் வீழ்த்த வேண்டும்! அஷ்வினுக்கு கபில்தேவ் அறிவுரை.!
Kapil Dev congratulated Ashwin
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அஷ்வின் 500 விக்கட்டுகளை கைப்பற்ற வேண்டும் என முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.
இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் 6 விக்கெட்கள் கைப்பற்றினார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் கபில்தேவின் சாதனையை முறியடித்து, அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தார். அவருக்கு அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டு குவிந்து வருகிறது. அஸ்வின் 85 போட்டிகளில் 436 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.
இந்நிலையில், 434 விக்கட்டுகளை வீழ்த்திய தனது சாதனையை முறியடித்த அஸ்வினுக்கு கபில்தேவ் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக,
இந்திய அணியில் சமீப காலமாக அஸ்வினுக்கு சரியான முறையில் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்றும் இருப்பினும் அவர் தற்போது மிகப் பெரிய சாதனையை படைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அவருக்கு தொடர்ந்து அணியில் இடம்கொடுத்திருந்தால் இந்த சாதனையை அவர் எப்போதோ கடந்திருப்பார் என்றும், இந்த சாதனை மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் அஸ்வின் வியக்கத்தக்க வீரர் என்றும், புத்தசாலித்தனமான பந்து வீச்சாளர் என்றும், 500 விக்கெட் என்ற இலக்கை அவர் அடைய வேண்டும் என்றும் கபில்தேவ் தெரிவித்தார்.
இதனை அடைய முயற்சி செய்து கட்டாயம் சாதிப்பார் என உறுதியாக நம்புவதாகவும், ஒருவேளை அதையும் தாண்டி அஸ்வின் அசத்தலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
English Summary
Kapil Dev congratulated Ashwin