ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா-லக்னோ ஆட்டத்தின் தேதியில் திடீர் மாற்றம்..!
Kolkata and Lucknow match rescheduled to 08th
இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் போட்டியான ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
தற்போது லீக் போட்டிகள் நடைபெற்றுவரும் நிலையில், எதிர்வரு ஏப்ரல் 06-ஆம் தேதி மாலை 3.30 மணிக்கு கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெற இருந்த கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் இடையிலான ஆட்டத்தை திட்டமிட்டபடி நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

ஏப்ரல் 06 அன்று ராம நவமி கொண்டாடப்படவுள்ளது. ஆதலால் அன்றைய தினம் பெங்காலில் ராம நவமி ஊர்வலங்கள் நடைபெறவுள்ளது. அத்துடன், அங்கு கிரிக்கெட் போட்டியும் நடைபெற்றால், உரிய பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்படும். இதனால், பெங்கால் கிரிக்கெட் சங்கம், மற்றும் ஐபிஎல் நிர்வாகத்திடம், கொல்கத்தா நகர போலீசார் போட்டியை வேறு ஒரு நாளில் மாற்றி வைக்கும் படி கோரிக்கை வைத்தனர்.
அதனையடுத்து, இந்த ஆட்டம் கவுகாத்திக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், கொல்கத்தா மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஏப்ரல் 06-ஆம் தேதிக்கு பதிலாக ஏப்ரல் 08-ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெறும் என பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
English Summary
Kolkata and Lucknow match rescheduled to 08th