லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் : சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற மணிப்பால் வீரருக்கு ஆட்டநாயகன் விருது! - Seithipunal
Seithipunal


லெஜண்ட்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் பங்கு பெற்ற
முதல் இரண்டு சீசன்கள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது.

இந்த தொடரில் இந்தியா கேப்பிடல்ஸ், மணிபால் டைகர்ஸ் அணிகள் தலா ஒரு முறை கோப்பையை வென்றுள்ள நிலையில், இந்த தொடரின் 3வது சீசன் கடந்த மாதம் 20-ம் தேதி தொடங்கியது.

இந்த தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஹர்பஜன் சிங் தலைமையிலான மணிபால் டைகர்ஸ் அணி, குர்கீரத் சிங் தலைமையிலான டோயம் ஐதராபாத் அணிகள் மோதியது.  ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மணிபால் டைகர்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 144 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 145 ரன் என்ற இலக்கை நோக்கி ஆடிய ஐதராபாத் அணியும் 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 144 ரன்களே எடுத்தது. இதனால் ஆட்டம் டை ஆனதை தொடர்ந்து,  சூப்பர் ஓவர் முறையில், மணிபால் அணி 3 பந்துகளில் 9 ரன் எடுத்து திரில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் அதிரடியாக ஆடிய திசரா பெரேராவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. திசரா பெரேரா இந்த போட்டியில் 48 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Legends league cricket man of the match award for manipal thrilling victory in the super over


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->