தமிழ்நாடு முழுவதும் உதயநிதி ஸ்டாலின் சுற்றுப் பயணம்!...மகளிருக்கு ஜாக்பாட்!...இதோ முழு விவரம்! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 2026-ம் ஆண்டு  சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலில் 200 தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கான வியூகம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 18 மாதம் மட்டுமே உள்ளதால் ஆட்சி காலம் முடிவடைவதற்குள் சுமார் ரூ.90 லட்சம் கோடி அளவுக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்காக மாவட்ட வாரியாக கடனுதவி வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்ய தமிழக மகளிர் மேம்பாட்டு நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், துணை முதல்மைச்சர் உதயநிதி மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்க உள்ளதாகவும், இதற்காக மாவட்ட வாரியாக உதயநிதியின் சுற்றுப்பயணம் தயாராகி வருவதாகவும்,  ஆயுத பூஜைக்கு பிறகு அவர் ஒவ்வொரு மாவட்டமாக சென்று வர பயணத் திட்டம் வகுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2009-ம் ஆண்டு துணை முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது மாவட்டம் வாரியாக சென்று பலமணி நேரம் ஒவ்வொரு சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கியது போல், இப்போது துணை முதலமைச்சராக உள்ள உதயநிதி சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி வழங்க உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Udayanidhi stalin tour across tamil nadu jackpot for daughters here the full details


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->