தமிழக மீனவர்கள் 37 பேர் விடுதலை!...இலங்கை நீதிமன்றம் உத்தரவு!
Tamil nadu 37 fishermen freed sri lanka court order
நாகை, மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள், கடந்த மாதம் 21-ம் தேதி இலங்கை நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தபோது 37 மீனவர்களை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படை கைது செய்தது.
மேலும் மீனவர்களின் மூன்று விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த ஒரு வருடமாக இலங்கை கடற்படை தொடர்ந்து தமிழக மீனவர்களை குறிவைத்து கைது செய்து வரும் நிலையில், தமிழகத்தை சேர்ந்த அனைத்து அரசியல் கட்சிகள் இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் வலியுறுத்தினார்.
இந்த நிலையில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட மயிலாடுதுறை மீனவர்கள் 37 பேரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மீனவர்கள் பயன்படுத்திய 3 விசைப்படகுகள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள் இந்திய துணை தூதரக அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், மீனவர்கள் விரைவில் தமிழகம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Tamil nadu 37 fishermen freed sri lanka court order