சுரேஷ் ரெய்னாவின் சாதனை முறியடித்துள்ள மஹேந்திர சிங் தோனி..!
Mahendra Singh Dhoni has broken Suresh Rainas record
18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. நடப்பு ஐ.பி.எல். தொடரின் 8-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதின.
இதில் முதலில் ஆடிய பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 07 விக்கெட்டுக்கு 196 ரன்கள் எடுத்தது அசத்தியது. அணியின் கேப்டன் ரஜத் படிதார் பொறுப்புடன் ஆடி 51 ரன்கள் எடுத்தார். ஆர்சிபி அணி சிறப்பான முறையில் பந்து வீசியது.
197 ரன்கள் என்ற வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவரில் 146 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வி அடைந்தது. இதன்மூலம் ஆர்சிபி அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில், சிஎஸ்கே அணிக்காக அதிக ரன்கள் எடுத்த சுரேஷ் ரெய்னாவின் சாதனையை எம்.எஸ்.தோனி முறியடித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிக ரன் எடுத்தவர் பட்டியலில் சுரேஷ் ரெய்னா முதலிடத்தில் உள்ளார். அவர் 2008 முதல் 2021 வரை 171 இன்னிங்சில் விளையாடி 4,687 ரன் எடுத்துள்ளார். இதில் 1 சதமும், 33 அரை சதமும் அடங்கும். சராசரி 32.32 ஆகும்.
எம்.எஸ்.தோனி 204 இன்னிங்சில் 4,699 ரன்கள் எடுத்துள்ளார். அவரது ஸ்கோரில் 22 அரை சதம் அடங்கும். சராசரி 40.25 ஆகும். இதன் மூலம் ரெய்னாவின் சாதனையை எம்.எஸ்.தோனி முறியடித்துள்ளார்.
English Summary
Mahendra Singh Dhoni has broken Suresh Rainas record