தன்னை பற்றிய வதந்திக்கு முற்றுபுள்ளி வைத்துள்ள மஹேந்திர சிங் தோனி..? வீடியோ உள்ளே..!
Mahendra Singh Dhoni puts an end to the rumors about him Video inside
நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி இதுவரை ஆடிய 08 போட்டிகளில் 02-இல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதன் காரணமாக புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதனால் ரசிகர்கள் கடும் சோகத்தில் உள்ளனர். அடுத்து வரும் 06 போட்டிகளிலும் வென்றால் மட்டுமே சிஎஸ்கே அணியால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற கடினமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் சென்னை அணியின் கேப்டன் தோனி 05 லிட்டர் பால் குடிக்கிறார். அதுதான் அவருடைய பிட்னஸ்க்கு காரணம் என வதந்தி பரவியது. இது தொடர்பாக கேப்டன் தோனி பதில் அளித்துள்ளார்.
இணையத்தில் உலாவிய இந்த தகவல் தொடர்பாக தோனியிடமே கேள்வி எழுப்பப்பட்ட்டுள்ளது. அதற்கு அவர் கூறியுள்ளதாவது; 'எனக்கு பால் குடிக்கும் பழக்கம் உள்ளது உண்மைதான். ஆனால், ஒருநாளுக்கே மொத்தமாக ஒரு லிட்டர் அளவிற்கு தான் பால் குடிப்பேன் என்று நினைக்கிறேன். கூடுதலாக 04 லிட்டர் என்பது கொஞ்சம் ஓவர்தான். சராசரி மனிதர் தினமும் 05 லிட்டர் பால் குடிப்பது எளிதல்ல என்று தெரிவித்துள்ளார். சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக பேசப்பட்டு வந்த இந்த வதந்திக்கு தோனி முற்றுபுள்ளி வைத்துள்ளார்.
English Summary
Mahendra Singh Dhoni puts an end to the rumors about him Video inside