நீதான் ஆடுற! தாதா போட்ட கட்டளை! தோனியின் அந்த மரண ஆட்டம் பற்றி தெரியுமா? - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் 42வது பிறந்தநாளை, அவரது ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் வரை வாழ்த்தி கொண்டாடி வருகின்றனர்.

சிறந்த பினிஷர், அதிரடி ஆட்டக்காரர், அபார விக்கெட் கீப்பர், கூல் கேப்டன், மாஸ்டர் மைண்ட் என ரசிகர்களாலும், கிரிக்கெட் வர்ணனை வல்லுனர்களாலும் பாராட்டப்படுகின்ற மகேந்திர சிங் தோனியின் தாரக மந்திரம் ஒன்றே ஒன்றுதான், "வெற்றியோ, தோல்வியோ. உனது ஆட்டத்தை வெளிப்படுத்தினால், கோப்பைகள் தானே கிடைக்கும்'' என்பதுதான். 'களத்தில் இறுதிவரை போராட வேண்டும்' என்பதும் அவரின் அறிவுரைகளில் ஒன்று.

2003 - 2004 கால கட்டத்தில் இந்திய அணிக்கு அதிரடியாக பேட்டிங் செய்யக்கூடிய ஒரு விக்கெட் கீப்பர் தேவைப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் இந்திய ஏ அணிக்காக முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் தோனி மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருந்தார்.

 


 

இந்த விவரம் அணியின் தேர்வு குழுவுக்கும், அப்போதைய கேப்டன் கங்குலிக்கும் சென்றுள்ளது. இதனை அடுத்து 2004 வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் மகேந்திர சிங் தோனிக்கு வாய்ப்பு கிடைத்தது. தனது முதல் இரு ஆட்டத்தில் சரியான வாய்ப்பு மற்றும் ரன் எடுக்க முடியாமல் தோனி தடுமாறினார்.

இதனை அடுத்து 2005 ஆம் ஆண்டு கேப்டன் கங்குலி மகேந்திர சிங் தோனியை டாப் ஆர்டரில் பேட்டிங் செய்ய வைத்தார். அதற்கு கை மேல் பலன்களை கிடைத்தது. 

டாப் ஆர்டரில் களமிறங்கிய மகேந்திர சிங் தோனி தனது முதல் ஆட்டத்திலேயே 123 பந்துகளில் 148 ரன்கள் எடுத்து அசத்தினார். 

மேலும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் 16 முறை மூன்றாவது களம் இறங்கி 993 ரன்களையும் குவித்தார் மகேந்திர சிங் தோனி.

இதில், இரண்டு சதங்களும், ஆறு அரை சதங்களும் அடங்கும். சராசரி 82.75 ரன் ஆகும். மேலும், மகேந்திர சிங் தனது சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அடித்த அதிகபட்சமாக எடுத்த 183 ரன்னும் மூன்றாவது பேட்ஸ்மனாக களமிறங்கியது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சரி விஷயத்திற்கு வருவோம். தோனியை டாப் ஆர்டரில் கங்குலி களமிறக்கியது பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தான், அந்த ஆட்டத்திற்கு முன்பு கேப்டன் கங்குலி தோனியை சந்தித்து நீ மூன்றாவது பேட்ஸ்மேனாக களம் இறங்கி ஆடு என்றார். அதற்க்கு தோனி 'அப்போ நீங்கள்' என்ற கேள்வியை கங்குலியை பார்த்து எழுப்பிள்ளார்.

அதற்கு கங்குலி நான் நான்காவது பேட்ஸ்மனாக களம் இறங்குவேன் என்று கூறியுள்ளார் கங்குலி. ஆம், அன்று தோனி 123 பந்துகளில் 148 ரன்களை குவித்து ஆட்ட நாயகன் விருதையும் தட்டி சென்றார்.  

மூன்றாவதாக களமிறக்கிய கங்குலியின் நம்பிக்கை அன்று வீண் போகவில்லை. அதன் பின்பும் வீண் போகவில்லை.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MS Dhoni Top Order First match Ganguly Order Turning Point of Dhoni Carrier


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->