பரபரப்பான ஆட்டத்தை பார்த்து எனது இதயத்துடிப்பு எகிறிவிட்டது - டோனி! - Seithipunal
Seithipunal


பரபரப்பான ஆட்டத்தை பார்த்து எனது இதயத்துடிப்பு எகிறிவிட்டது என முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திர சிங் டோனி தெரிவித்துள்ளார்.

டி20 உலக கோப்பை கிரிக்கெட் 2007 ஆம் ஆண்டு அறிமுகமானது. முதலாவது உலக கோப்பையை டோனி தலைமையிலான இந்திய அணி வென்று வரலாறு படைத்தது. அடுத்த உலகக் கோப்பையை இந்தியா 17 ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டு வெற்றி பெற்று உலக கோப்பையை கைப்பற்றியது. நீண்டகால உலகக்கோப்பை ஏக்கத்தை தனித்த இந்திய அணிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

முன்னாள் கேப்டன் டோனி சமூக வலைதள பக்கத்தில் 2024 உலகக்கோப்பை சாம்பியன்கள். பரபரப்பான ஆட்டத்தை பார்த்து எனது இதய துடிப்பு எகிரிவிட்டது. ஆனால் நிதானமாக இருந்து தன்னம்பிக்கையுடன் விளையாடி சிறப்பாக முடித்தீர்கள்.

உலக கோப்பையை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வருவதற்காக நாட்டுமக்கள் சார்பிலும் உலகில் உள்ள எல்லா இந்தியர்கள் சார்பிலும் மிகப்பெரிய நன்றி. எனக்கு விலைமதிப்பற்ற பிறந்தநாள் பரிசை அளித்ததற்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான அணி வெஸ்ட் இண்டீஸ் 2007 ஆம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பையில் இந்திய மோசமாக தோற்று முதல் சுற்றுயுடன் வெளியேறியது. இப்போது 2024 ஆம் ஆண்டில் 20 ஓவர் உலக கோப்பையை வென்றதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் இந்திய கிரிக்கெட்டின் பயணம் முழுமை அடைந்துள்ளது.

எனது நண்பர் ராகுல் டிராவிற்காக மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை அவர் தவறவிட்டாலும் இப்போது இந்த 20 ஓவர் உலகக் கோப்பையில் பயிற்சியாளராக அவரது பங்களிப்பு மகத்தானது என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

My heart rate soared after watching the exciting game dhoni


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->