நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்! தொடரை சமன் செய்தது தென் ஆப்பிரிக்கா.! - Seithipunal
Seithipunal


நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 198 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி தொடரை 1-1 என சமன் செய்தது.

நியூசிலாந்து, தென் ஆப்பிராக்கா இடையே இரண்டு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 276 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றிருந்தது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில்  பேட்டிங் தேர்வு செய்தது .

அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 364 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நிலைத்து நின்று ஆடிய தொடக்க ஆட்டக்காரர் சரேல் எர்வீ சதமடித்து 108 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜேன்சன் 37 ரன்னுடன் அவுட்டாகாமல் களத்தில் இருந்தார்.

நியூசிலாந்து சார்பில் வாக்னர் 4 விக்கெட்டுகளும், மேட் ஹென்றி 3 விக்கெட்டுகளும், ஜேமிசன் 2 விக்கெட்டுகளும், டிம் சவுத்தி 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

அடுத்து முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி, அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 293 ரன்களை மட்டுமே எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் கிராண்ட் ஹோம் 120 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 5 விக்கெட்டுகளையும், ஜேன்சன் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

71 ரன்கள் முன்னிலை பெற்ற தென் ஆப்பிரிக்கா அணி இரண்டாவது இன்னிங்சை ஆடியது. அதில் 9 விக்கெட் இழந்து 354 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. கைல் வெரைன் 136 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

நியூசிலாந்து சார்பில் டிம் சவுத்தி, மேட் ஹென்றி, ஜேமிசன், வாக்னர் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 426 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடின இலக்குடன் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை ஆடியது.

தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களுடன் விரைவிலேயே ஆட்டமிழந்து வெளியேறினர். டேவன் கான்வே நிலைத்து நின்று பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்த நிலையில், சதமடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 92 ரன்களில் ஆட்டமிழந்தார். பிளெண்டல் 44 ரன்களில் ஆட்டமிழக்க மற்ற வீரர்கள் விரைவில் அவுட் ஆகி வெளியேறினர்.

இரண்டாவது இன்னிங்சில் நியூசிலாந்து அணி 227 ரன்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. இதன்மூலம் 198 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று, தொடரை 1-1 என சமன் செய்தது.

தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா, ஜேன்சன், மகாராஜ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

ஆட்ட நாயகன் விருது தென் ஆப்பிரிக்காவின் ரபாடாவுக்கும், தொடர் நாயகன் விருது நியூசிலாந்தின் மாட் ஹென்றிக்கும் வழங்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NewZealand South Africa Test cricket


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->