நவம்பர் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனை விருது.. ஐசிசி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


 நவம்பர் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரராக இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதுக்கான பரிந்துரை பட்டியலை சமீபத்தில் ஐசிசி வெளியிட்டிருந்தது.

இதில், நவம்பர் மாத சிறந்த வீரர்களுக்கான விருது பரிந்துரை பட்டியலில் இங்கிலாந்து அணியின் வீரர்களான ஜோஸ் பட்லர், அடில் ரஷீத் மற்றும் பாகிஸ்தான் அணியின் ஷாகின் அப்ரிடடி ஆகியோர் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

அதேபோல், சிறந்த வீராங்கனைகளுக்கான விருது பரிந்துரை பட்டியலில் அயர்லாந்து மகளிர் அணியின் கேபி லெவிஸ், தாய்லாந்து மகளிர் அணியின் நத்தகன் சந்தம் மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணியின் சித்ரா அமீன் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தது.

இவர்களிலிருந்து தலா ஒருவர் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். ஐசிசியின் அங்கீகாரம் பெற்ற வாக்கு கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் ரசிகர்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் சிறந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்த நிலையில் நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கு இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர்  தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது. அதேபோல் சிறந்த வீராங்கனையாக பாகிஸ்தான் மகளிர் அணியின் சித்ரா அமீன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

November month ICC awards goes to butler and chidra ameen


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->