அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்த பாகிஸ்தான்! ராசியில்லாத வில்லியம்சன் செய்த சாதனை! - Seithipunal
Seithipunal


உலகக்கோப்பை கிரிக்கெட் இன்று நடைபெற்ற முக்கிய லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் -நியூசிலாந்து அணிகள் மோதின.

அரையிறுதிக்கு முன்னேற வேண்டும் என்றால், இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்றிபெற வேண்டும் என்ற நெருக்கடியில் இரு அணிகளும் களமிறங்கின.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்யவே, அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. 

பாகிஸ்தான் பந்து வீச்சை சிதறடித்த நியூசிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில், 6 விக்கெட் இழப்புக்கு 401 ரன்கள் எடுத்தது. 

நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக ரச்சின் 108 ரன்னும், அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 95 ரன்கள் குவித்தனர்.

சர்வதேச ஒருநாள் ஆட்டங்களில் அதிக முறை 90-99 ரன்களில் ஆட்டமிழந்தவர்களின் பட்டியலில் கேன் வில்லியம்சன் 2வது இடத்தை பிடித்துள்ளார். மொத்தம் 7 முறை 90-99 ரன்களில் அவுட்டாகி சதத்தை தவறவிட்டுள்ளார். 

இந்த பட்டியலில் எந்த வீரனும் எட்ட முடியாத தூரத்தில் சச்சின் டெண்டுல்கர் 17 முறை தனது சதத்தை தவறவிட்டு முதலிடம் பிடித்துள்ளார்.

7 முறை 90-99 ரன்களுக்குள் அவுட்டாகிய கேன் வில்லியம்சன் உடன் இரண்டாம் இடத்தை நேதன் ஆஸ்டில், கிராண்ட் பிளவர், அரவிந்த டி சில்வா பகிர்ந்துகொண்டுள்ளனர்.

402 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி, தொடர்ந்து மழைபெய்ததால் டி.எல்.எஸ். விதிப்படி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக நடுவர்கள் அறிவித்தனர். இதன் மூலம் அரையிறுதி செல்லும் வாய்ப்பை பாகிஸ்தான் அணி தக்கவைத்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nz vs pak Williamson Century missed


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->