ஒலிம்பிக் : இந்திய ஹாக்கி அணிக்கு பரிசுத்தொகை வழங்கி கவுரவித்த ஒடிசா அரசு!
Olympics Odisha government honored the Indian hockey team with prize money
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 33-வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றது. இதில் 206 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றநர். இந்நிலையில் இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கி போட்டியில், இந்திய அணி ஸ்பெயின் அணியை எதிர்கொண்டது.
ஹர்மன்ப்ரீத் சிங் தலைமையிலான இந்திய ஹாக்கி அணி ஸ்பெயினை வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்று அசத்தியது. வெண்கல பதக்கம் வென்ற ஹாக்கி அணிக்கு பல மாநில அரசுகள் பாராட்டுகளையும், பரிசுத்தொகையையும் வழங்கி கவுரவித்து வருகின்றது.
இந்த நிலையில், இந்திய ஹாக்கி அணி வீரர்களுக்கு ஒடிசா மாநில அரசு சார்பில் புவனேஸ்வரில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த வீரர் அமித் ரோஹிதாசுக்கு ரூ,4 கோடியும், சீனியர் வீரர் ஸ்ரீஜேசுக்கு ரூ,50 லட்சமும், அணியின் மற்ற வீரர்களுக்கு தலா ரூ,15 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கி கவுரவிக்கப்பட்டது.
கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தேசிய ஆண்கள் மற்றும் பெண்கள் ஹாக்கி அணிகளுக்கு ஒடிசா அரசு நிதியுதவி அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
English Summary
Olympics Odisha government honored the Indian hockey team with prize money