"போட்டியைப் பார்க்க தினக்கூலியை இன்று விட்டுவிட்டேன்" பாகிஸ்தான் ரசிகர் கோபம்!! - Seithipunal
Seithipunal


நேற்றய தினம் ஜூன் 9ஆம் தேதி நடந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. நேற்று நடந்த போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்து வீச்சால் பாகிஸ்தான் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோற்று போனது. 

இன்றுவரை, பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பையில் இந்தியா விளையாடிய 8 ஆட்டங்களில் 7 போட்டியில் வெற்றி பெற்று அபார சாதனையை படைத்தது இந்தியா.  இந்தியாவிடம் அடைந்த தோல்வியால் பாகிஸ்தான் ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். போட்டி முடிந்த பிறகு, பாகிஸ்தானை சேர்ந்த  பெண் யூடியூபர் ஒருவர் பாகிஸ்தான் ஆதரவாளர்களை அணுகினார், அப்போது பாகிஸ்தான் ஆதரவாளர்கள் தங்களது அணியின் தோல்வியால் மிகவும் கோபமாக இருந்தனர். இதற்கு பதிலளித்த அந்த ரசிகர்கள் , பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் இந்த தோல்விக்கு அவமானபடவேண்டும் என்று கூறினார்.

அதில் ஒரு பாகிஸ்தான் ரசிகர் பேசுகையில,"நாங்கள் கூலித் தொழிலாளர்கள்" என்று கூறினார். நாங்கள் பாகிஸ்தான் அணிக்கு ஆதரவு தெரிவிக்க எங்களது தினசரி ஊதியத்தை விட்டுவிட்டு இங்கு வந்துள்ளோம். இருந்தும் இந்த வெட்கம் கெட்டவர்கள் போட்டியில் வெற்றி பெற நினைப்பதில்லை. வெட்கக்கேடான இவர்களுக்கு மாதம் 45 லட்சம் ரூபாய் சம்பளம்" என்று கோபத்தை கொட்டி தீர்த்தனர். "10 ரூபாய் கூட மதிப்பு இல்லை. இந்தியாவுக்கு எதிராக 120 ரன்களைக் கூட அவர்களால் விரட்ட முடியவில்லை. உகாண்டா போன்ற சிறிய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் மட்டுமே இந்த வெட்கம் கெட்டவர்கள் வெற்றி பெறுவார்கள்" என்று தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர்.

"இன்றோடு கிரிக்கெட் விளையாடுவதை விட்டுவிட்டு எங்களுடன் பாகிஸ்தானில் தங்கி ஹோட்டல்களில் தினக்கூலியாக வேலை செய்ய வேண்டும்" என்று பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் அணியின் செயல்பாட்டால் மிகவும் கோபமடைந்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan fans getting angry on Pakistan team


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->