மகளிர் டி20 உலகக் கோப்பை.. பாகிஸ்தான் அபார பேட்டிங்.. இலக்கை எட்டுமா இந்திய அணி?
Pakistan target of 150 runs against India
மகளிர் டி20 உலகக்கோப்பை இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 150 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
8வது மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் பிப்ரவரி நேற்று முதல் பிப்ரவரி 26ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. அதன்படி மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த டி20 உலக்கோப்பையில் மொத்தம் 23 போட்டிகள் நடைபெற உள்ளது.
அவை 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளது. அதேபோல் 'பி' பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், அயர்லாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன.
இதில், இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் இன்று பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது. இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இந்திய அணியில் அதிரடி தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தானா காயம் காரணமாக இன்றைய போட்டியில் விளையாட வில்லை, அவருக்கு பதிலாக யாஷ்டிகா பாடியா விளையாடுகிறார்.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 149 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தான் அணியில் சிறப்பாக விளையாடிய பிஸ்மா மகரூப் 68 ரன்களும், ஆயிஷா நசீம் 25 பந்துகளில் 43 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இந்திய அணி களமிறங்க உள்ளது.
English Summary
Pakistan target of 150 runs against India