மேற்கிந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பாகிஸ்தான் அணி அறிவிப்பு..!
Pakistan team announced for the Test series against the West Indies
மேற்கிந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 02 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
அதன்படி இரண்டு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் வரும் 17-ம் தேதியும், 02-வது போட்டி 25-ஆம் தேதியும் நடைபெற உள்ளன. குறித்த இரண்டு போட்டிகளும் முல்தானில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஷான் மசூத் தலைமையிலான பாகிஸ்தான் அணியில் நீண்ட நாள் கழித்து தொடக்க ஆட்டக்காரர் ஆன இமாம் -உல் -ஹக் இடம் பிடித்துள்ளார்.
பாகிஸ்தான் அணி விவரம்:-
ஷான் மசூத் (கேப்டன்), சாத் ஷகீல், அப்ரார் அகமது, பாபர் அசாம், இமாம் - உல் - ஹக், கம்ரான் குலாம், காசிப் அலி, குர்ரம் ஷசாத், முகமது அலி, முகமது ஹுரைரா,முகமது ரிஸ்வான், நோமன் அலி, ரோஹைல் நசீர், சஜித் கான் மற்றும் சல்மான் அலி ஆகா
ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
English Summary
Pakistan team announced for the Test series against the West Indies