பாரா ஒலிம்பிக் ஆண்கள் பேட்மிண்டன் : இந்திய வீரர் நிதிஷ் குமார் அரையிறுதிக்கு முன்னேற்றம்! - Seithipunal
Seithipunal


பாரா ஒலிம்பிக் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் நிதிஷ் குமார், தாய்லாந்து வீரர் மோங்கான் பன்சனை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாராஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்  உலகம் முழுவதிழும்  இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள நிலையில், இந்தியா தங்கம் மற்றும் வெள்ளி பதங்கங்களை குவித்து வருகிறது.

இந்த நிலையில், இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 1:20 மணிக்கு நடைபெற்ற பாரா ஒலிம்பிக் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் நிதிஷ் குமார், தாய்லாந்து வீரர் மோங்கான் பன்சன் ஆகியோர் மோதினர்.

இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே இந்திய அணி வீரர் நிதிஸ்குமார் ஆதிக்கம் செலுத்தினார். இதனால் 21-13, 21-14 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Para Olympic Mens Badminton Indian player Nitish Kumar advances to semi finals


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->