பார ஒலிம்பிக் : வெற்றி பெற்ற தமிழ்நாட்டு வீரர்களுக்கு மு.க.ஸ்டாலின் ஊக்கத்தொகை! - Seithipunal
Seithipunal


பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இந்தியா சார்பில் 84 பேர் கொண்ட அணி பங்கேற்றது.

இந்நிலையில், மகளிர் பேட்மிண்டனில் பெண்கள் ஒற்றையர், எஸ்யு 5 பிரிவின் இறுதிப் போட்டி மற்றும் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் தமிழக வீராங்கனை  துளசிமதி முருகேசன் 17-21, 10-21 என்ற செட் கணக்கில் க்யு ஹ்யா யங்கிடம் தோல்வி அடைந்தார். இதன் மூலம் துளசிமதி வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார்.

இதே பிரிவில் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்தியாவின் மனிஷா ராமதாஸ், டென்மார்க்கின் கேத்ரின் ரோசன்கிரென் உடன் மோதினார். இதில் மனிஷா ராமதாஸ் 21-12, 21-8 என்ற செட் கணக்கில் கேத்ரின் ரோசன்கிரெனை வீழ்த்தினார். இதன் மூலம் அவர் வெண்கலம் வென்றார்.

மேலும் பெண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் நித்யஸ்ரீ சிவன் வெண்கலப்பதக்கம் வென்றார்.
ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் 1.85 மீட்டர் உயரம் தாண்டி மாரியப்பன் தங்கவேல் வெண்கல பதக்கம் வென்றார்.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, தலைமைச் செயலகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் 2024 பிரான்ஸ் நாட்டின் பாரீஸில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் வென்ற விளையாட்டு வீராங்கனைகள் துளசிமதி, நித்ய ஸ்ரீ, மணிஷா மற்றும் விளையாட்டு வீரர் மாரியப்பன் ஆகியோருக்கு உயரிய ஊக்கத் தொகையாக மொத்தம் 5 கோடி ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி, வாழ்த்துகளை தெரிவித்தாக கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Para olympics mk stalin incentive for winning tamilnadu athletes


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->