புரோ ஹாக்கி லீக், இமாலய வெற்றி பெற்ற இந்தியா.! - Seithipunal
Seithipunal


புரோ ஹாக்கி லீக் தொடரில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

மூன்றாவது புரோ ஹாக்கி லீக் போட்டிகள் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் 9 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. தென் ஆப்பிரிக்காவின் போட்செப்ஸ்ட்ரூம் நகரில் நடைபெற்ற இந்தியா தென் ஆப்பிரிக்க அணிகளுக்கிடையேயான ஆட்டத்தில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 10-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று தொடரில் மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது. 

போட்டி தொடங்கிய 12-வது நிமிடத்தில், தென் ஆப்பிரிக்காவின் பெல் முதல் கோலை அடித்தார். பின்னர் வீறுகொண்டு எழுந்த இந்திய அணியில், 15-வது நிமிடத்தில் சுரேந்தரும், 27-வது நிமிடத்தில் லக்ராவும், 28-வது நிமிடத்தில் மன்தீப் சிங்கும் கோல் அடிக்க ஆட்டத்தின் முதல் பாதியில், இந்திய அணி 3-1 என முன்னிலை பெற்றது. 

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட இந்திய அணி கோல் மழை பொழிந்தது. ஹர்மன்பிரீத் சிங் ஆட்டத்தின் 36, 52, 60-வது நிமிடத்தில் நான்கு கோல்களை அடித்தார். இதில் 60-வது நிமிடத்தில் மட்டும் இரண்டு கோல்களை அடித்தார்.

ஆட்டநேர முடிவில் இந்திய அணி 10-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியை பதிவு செய்தது. இதுவரை இந்திய அணி பங்கேற்ற 4 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றி பெற்று 9 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்திய அணி வரும் 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் ஸ்பெயின் அணியை தனது சொந்த மண்ணில் சந்திக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pro Hockey India beat South Africa


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->