போராடி தோற்றது தமிழ் தலைவாஸ்.! - Seithipunal
Seithipunal


புரோ கபடி லீக் ஆட்டத்தில் உத்திர பிரதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி போராடி தோல்வி அடைந்தது.

எட்டாவது புரோ கபடி லீக் ஆட்டங்கள் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணியும் உ.பி. அணியும் மோதின. ஆட்டத்தின் தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய தமிழ் தலைவாஸ் அணி வீரர்கள் 7-5 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றிருந்தனர். பின்னர் சுதாரித்துக் கொண்டு எழுச்சி கண்ட உ.பி. அணியினர் தமிழ் தலைவாஸ் வீரர்கள் அனைவரையும் ஆட்டமிழக்கச் செய்து 17-15 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றனர். 

தொடர்ந்து போராடிய தமிழ் தலைவாஸ் அணி வீரர்கள் ஆட்டத்தின் முதல் பாதி முடிவில், 22-20 என மீண்டும் முன்னிலை பெற்றனர். ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் மீண்டும் எழுச்சி கண்ட உ.பி. அணியினர் தமிழ் தலைவாஸ் வீரர்கள் அனைவரையும் மீண்டும் ஆட்டமிழக்கச் செய்தனர். இதன் மூலம் 30-26 என உ.பி. அணி முன்னிலை பெற்றது. 

அதன் பிறகு தமிழ் தலைவாஸ் வீரர்களால் எழுச்சியுடன் விளையாட முடியாமல் போனது. ஆட்ட நேர முடிவில் 39-41 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி தோல்வியுற்றது. தமிழ் தலைவாஸ் அணி 18 போட்டிகளில் 5 வெற்றி, 7 தோல்வி, 6 டிரா என 46 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pro Kabbadi Tamil Thalaivas


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->