#IPL2022 : ப்ளே ஆப் சுற்றுக்கு செல்லப் போவது எந்த அணி.? டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங்.! - Seithipunal
Seithipunal


2022 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. பிளே ஆப் சுற்றுக்கு எந்த அணி தகுதி பெற போகிறது என்று மிகுந்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.

இந்த நிலையில் இன்று நடைபெறும் 64-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற அதிக வாய்ப்புள்ளது. அதேபோல் தோல்வியை தழுவும் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்பை இழக்கக்கூடும். அதனால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

அணி விபரம்

டெல்லி கேப்பிடல்ஸ் : 

டேவிட் வார்னர், சர்ஃபராஸ் கான், மிட்செல் மார்ஷ், ரிஷப் பண்ட்(w/c), லலித் யாதவ், ரோவ்மன் பவல், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே, கலீல் அகமது.

 பஞ்சாப் கிங்ஸ் : 

ஜானி பேர்ஸ்டோவ், ஷிகர் தவான், பானுகா ராஜபக்சே, லியாம் லிவிங்ஸ்டோன், மயங்க் அகர்வால்(கே), ஜிதேஷ் சர்மா(வி.கீ), ஹர்பிரீத் பிரார், ரிஷி தவான், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Punjab kings won the toss choose to bowl against Delhi capitals


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->