தென்னாபிரிக்கா அணி வீரர் குவின்டன் டிகாக் திடீர் அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி.!!
Quinton de Kock announces retirement for Test Match
தென்னாபிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நேற்று முடிந்தது. இப்போட்டியில் இந்திய அணி, தென் ஆப்பிரிக்க அணியை 113 ரன்கள் வித்தியாசத்தில் விழுத்தியது. இதன் மூலம் இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
செஞ்சூரியன் மைதானத்தில் தென் ஆப்பிரிக்க அணி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தோல்வி அடைந்தது இல்லை. இந்த தோல்வி தென் ஆப்பிரிக்க அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
இந்நிலையில், முதல் டெஸ்ட் போட்டி முடிந்த கையோடு தென்ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் குவின்டன் டி காக் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தற்போது 29 வயதாகும் டி காக் ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குவின்டன் டி காக் தென் ஆப்பிரிக்க அணிக்காக 2012ஆம் ஆண்டு அறிமுகமாகிய இவர் இந்திய மைதானங்களில் பல அதிரடி வெற்றிகளை தென்னாப்பிரிக்கா அணிக்கு பெற்று தந்துள்ளார். இவர் டெஸ்ட் போட்டிகளில் 3300 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 5355 ரன்களும், டி20 போட்டிகளில் 1827 ரன்களும் எடுத்துள்ளார்.
குயின்டன் டி காக் ஓய்வு முடிவு குறித்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், குயின்டன் டி காக் அவரது மனைவிக்கு விரைவில் குழந்தை பிறக்க உள்ளது. ஆகையால் தனது குடும்பத்தினரும் அதிக நேரம் செலவழிக்க வேண்டும் என விரும்புகிறார். இதனால் அவர் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Quinton de Kock announces retirement for Test Match