சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் | 10 விக்கெட்களையும் கைப்பற்றிய ஜடேஜா.,க்கள் - Seithipunal
Seithipunal


ரஞ்சி கோப்பை தொடரில் தமிழக அணிக்கு எதிராக ஆடிய செளராஷ்டிர அணி கேப்டன் ஜடேஜா ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

ரஞ்சி கோப்பை ஆட்டம் : சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த செவ்வாயன்று தமிழ்நாடு - செளராஷ்டிர அணிகளுக்கு இடையிலான ஆட்டம் தொடங்கியது. 

இதில் செளராஷ்டிர அணியின் கேப்டனாக இந்திய அணியின் ஆள் ரவுண்டர் ஜடேஜா இருக்கிறார். முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி தனது முதல் இன்னிங்ஸில் 324 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

அதிகபட்சமாக இந்திரஜித் 66 ரன்கள், விஜய் சங்கர் 53 ரன்கள், ஷாருக் கான் 50 ரன்கள் எடுத்தார்கள். இதனையடுத்து ஆடிய செளராஷ்டிர அணி முதல் இன்னிங்ஸில் 192 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

இதன் மூலம் தமிழக அணி முதல் இன்னிங்ஸில் 132 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், தனது 2-வது இன்னிங்ஸில் 36.1 ஓவர்களில் 133 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

ஜடேஜாவின் சுழலில் தமிழ்க வீரர்கள் 7 பேர் அவுட்டாகினர். மற்றொரு வீரரான டிஏ ஜடேஜா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனையடுத்து செளராஷ்டிர அணிக்கு 266 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ranji Trophy TN match jadeja 7 wicket taken


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->