டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கபில்தேவ் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா.! - Seithipunal
Seithipunal


இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. 

இதில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று ( பிப்ரவரி 9 - 13) நாக்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த  ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட்டுகளையும் இழந்து 177 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் பந்து வீசிய ஜடேஜா 5 விக்கெட்களும், ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்களும், ஷமி மற்றும் சிராஜ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

அதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 77 ரன்கள் எடுத்திருந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று 2ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் எடுத்துள்ளது. 

இந்திய அணியில் தற்போது ஜடேஜா 66 ரன்களுடனும், அக்சர் படேல் 52 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.  இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 144 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்று மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் இந்த போட்டியில் 5 விக்கெட் மற்றும் அரைசதம் அடித்ததன் மூலம் புதிய சாதனை ஒன்றை ஜடேஜா படைத்துள்ளார். அதன்படி, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட்கள் மற்றும் அரைசதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் கபில் தேவ் முதலிடத்தில் (4 முறை) இருந்தார். 

இந்த நிலையில் தற்போது ரவீந்திர ஜடேஜா 5வது முறையாக ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட்கள் மற்றும் அரைசதத்தை அடித்துள்ளார். இதன் மூலம் ஜாம்பவான் கபுல் தேவன் சாதனையை முறியடித்துள்ளார். இந்த பட்டியலில் ரவிச்சந்திரன் அஸ்வின் 3வது இடத்தில் இருக்கிறார். அவர் 3 முறை இதை செய்திருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ravindra jadeja fifty and 5 wickets 5 times in test cricket


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->