மின் தூக்கியில் சிக்கிக்கொண்ட நடுவர்: தாமதமாக தொடங்கப்பட்ட டெஸ்ட் போட்டி! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க இருந்த மூன்றாவது நடுவர் மின் தூக்கியில் சிக்கிக் கொண்டதால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. 

மெல்பர்னில், ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. 

மூன்றாம் நாளான இன்று ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 187 ரன்கள் குவித்து 6 விக்கெட்டுகளை இழந்தது. பாகிஸ்தான் அணியை காட்டிலும் ஆஸ்திரேலியா அணி 241 ரன்கள் முன்னிலையில் உள்ளது. 

போட்டியின் மூன்றாம் நாளான இன்று மத்திய இடைவேளைக்குப் பிறகு மூன்றாம் நடுவர் இல்லாததால் போட்டி தாமதமாக தொடங்கப்பட்டது. 

கிரிக்கெட் மைதானத்தில் உள்ள மூன்றாம் நடுவர் மின் தூக்கில் மாட்டிக் கொண்டதால் ஆட்டம் தொடங்குவதற்கு சற்று தாமதமானது. 

இந்த சம்பவம் மைதானத்தை சிறிது வேடிக்கையாக மாற்றியது. இது தொடர்பாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தரப்பில் எக்ஸ் வலைதளத்தில் பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Referee stuck lift Test match started delayed


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->