டெஸ்ட் கிரிக்கெட் போட்டி! கபில் தேவின் சாதனயி முறியடித்த ரிஷப் பண்ட்.! - Seithipunal
Seithipunal


டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேக அரை சதம் கடந்த கபில் தேவின் சாதனையை முறியடித்த விக்கட் கீப்பர் ரிஷப் பண்ட் புதிய சாதனை படைத்துளார்.

இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் பல வருடமாக நடைபெற்று வருகிறது இதில் முதல் இன்னிங்சில் இந்தியா 252 ரன்களும் இலங்கை அணி 109 ரன்களும் எடுத்தன. 

இதனை அடுத்து இரண்டாவது இன்னிங்சை ஆடிய இந்தியா 400 ரன்களுக்கும் அதிகமான இலக்கை நிர்ணயித்து வலுவான நிலையில் உள்ளது. அதிரடியாக விளையாடிய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 28 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். 28 பந்துகளில் 7 பவுண்டரி 2 சிக்சர்களுடன் அரைசதம் அடித்து புதிய சாதனையை படைத்தார் ரிஷப் பண்ட்.

டெஸ்ட் போட்டிகளில் அதிக அரைசதம் கடந்த வீரர் என்ற சாதனையை கபில்தேவ் இதுவரை தன்வசம் வைத்திருந்தார். 1982 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கராச்சியில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தில் கபில்தேவ் அதிரடியாக ஆடி 30 பந்துகளில் அரைசதம் கடந்தார். இன்றைய போட்டியில் ரிஷப் பண்ட் 28 பந்துகளில் அரைசதம் கடந்ததன் மூலம் கபில் தேவின் 40 ஆண்டு கால சாதனையை முறியடித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rishab Pant New Record


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->