டி20 போட்டிகளில் சிறந்த கேப்டன் ரோஹித் ஷர்மாதான்! -சுரேஷ் ரெய்னா!! - Seithipunal
Seithipunal


ஒருநாள், டி20 போட்டிகளில் சிறந்த கேப்டன் ரோஹித் ஷர்மாதான் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர் சுரேஷ் ரெய்னா தனது சமூகவலைத்தள பக்கமான இன்ஸ்டாகிராம் பக்கத்திலில் ஸ்டோரியாக வைத்துள்ள செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

சமீபத்தில் நடந்த உலகக் கோப்பையின் மிகவும் பரபரப்பான ஆட்டம் அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் நசாவ் கவுண்டியில் நடந்தது. முதலில் இந்திய பேட்ஸ்மேன்கள் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், பிறகு எதிர் அணியின் பந்துவீச்சாளர்கள் எளிதான வெற்றியை தேடி கொடுத்தனர். இந்தியா வைத்த 120 ரன்கள் இலக்கை பாகிஸ்தான் அணியால் எட்டி பிடிக்க முடியவில்லை. கடைசி 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளை இழப்புக்கு 113 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

 T20 உலக கோப்பை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள்  இடையே மிகவும் விறுவிறுப்பான போட்டி நடந்தது. நியூயார்க் மாகாணத்தில் முதலில் வானிலை மோசமாக இருந்தது, அங்கு மழை காரணமாக போட்டி 50 நிமிடம் தாமதமாக தொடங்கியது. முதலில் டாஸ் முடிந்ததும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பந்துவீச முடிவு செய்தார். இந்திய அணியில் பேட்ஸ்மேன்களின் ஆட்டம் மிகவும் மோசமாக இருந்தது. முதலில் பேட் செய்த ஒட்டுமொத்த இந்திய அணியும் 119 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி பாகிஸ்தானிடம் விழுந்தது.

சமீபத்தில் டி20உலகக்கோப்பை போட்டிகளில் அதிக ஆட்டங்களை வென்ற சாதனையை முன்னாள் இந்திய அணி கேப்டன் தோனி படைத்திருந்தார். அந்த சாதனையை ரோஹித் சர்மா முறியடித்தார். இந்தநிலையில் முன்னாள் இந்திய அணியின் இடது கை அதிரடி ஆட்டக்காரர் சுரேஷ் ரெய்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் " best captain in white ball cricket  " என பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rohit Sharma is the best captain in T20 matches Suresh Raina


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->