அஸ்வின், சுந்தர், சஹால் அவ்வளவுதானா? இப்படிலாமா ஒரு கேப்டன் சொல்லுவாரு?!
Rohit Sharma say about team india ashwin chahal sundar issue
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவிக்கையில், "எந்த வரிசையிலும் களம் இறங்கி பேட்டிங் செய்ய அணி வீரர்கள் தயாராக இருக்க வேண்டும். நான் மூன்றாவதாக, நான்காவதாகத்தான் இறங்குவேன், அதுதான் எனக்கு சவுகரியமாக இருக்கும் என்று எந்த வீரரும் சொல்லக்கூடாது.
இதனை நாங்கள் கடந்த 3-4 ஆண்டுகளாக ஒவ்வொரு வீரருக்கும் சொல்லி கொண்டு இருக்கிறோம்.
அடுத்த 2 மாதங்கள் நடக்க உள்ள ஆட்டங்களில் வேகப்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள், எனவே, வேகப்பந்து வீச்சாளருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஆப் ஸ்பின்னர்கள் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் மற்றும் சாஹல் பெயரும் பரிசீலனை செய்யப்பட்டது. ஆனால், 17 பேரை மட்டுமே அணிக்கு தேர்வு செய்ய முடியும் என்பதால் அவர்கள் அணியில் இடம் அளிக்க முடியவில்லை.
எந்த வீரருக்கும் கதவு மூடப்பட்டுவிடவில்லை. யார் வேண்டுமென்றாலும் எப்போதும் அணிக்கு வரலாம். உலகக் கோப்பை போட்டிக்கு சாஹல், அஸ்வின், வாஷிங்டன் தேவைப்பட்டால், எப்படி சேர்த்து கொள்வது என்பதை பார்ப்போம்'' என்றார் ரோஹித் சர்மா.
இதற்கிடையே, "மேகமூட்டத்துடன் இருக்கும் சூரியன் மீண்டும் பிரகாசமாக உதிக்கும்" என்று, இந்திய அணியில் தேர்வாகாதது குறித்து சாஹல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
English Summary
Rohit Sharma say about team india ashwin chahal sundar issue