திடீர் ட்விஸ்ட்..! பல்பு வாங்கிய குஜராத் டைட்டன்ஸ்.. வெளுத்து வாங்கும் கெய்க்வாட்.!! - Seithipunal
Seithipunal


சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் குவாலிபையர் 1 குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து சென்னை அணி சார்பில் முதலில் ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் கான்வே ஆகியோர் களமிறங்கனர்.

முதல் ஓவரில் நிதானமான ஆட்டத்தை சென்னை அணி வெளிப்படுத்தியது. குஜராத் அணி பவுலர் தர்ஷன் நல்கண்டே 2ஆவது ஓவரை வீசினார். அப்போது அவர் வீசிய 3வது பந்தில் ருத்துராஜ் கெய்க்வாட் ஷுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். குஜராத் அணிக்கு எதிரான மூன்று ஆட்டங்களிலும் ருத்ராஜ் கெய்க்வாட் 50 ரன்கள் மேல் அடித்துள்ள நிலையில் அவுட் ஆனது பெரும் ஏமாற்றத்தை தந்தது. மைதானமே அமைதியான நிலையில் குஜராத் வீரர்களும் கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் உற்சாகத்தில் கொண்டாடினார்கள். முக்கிய போட்டியில் சொற்ப ரன்களில் வெளியேற இருந்தார்.

அப்பொழுது திடீர் ட்விஸ்டாக அந்த பந்து நோ பாலாக அறிவிக்கப்பட்டது. பந்துவீச்சாளர் தர்ஷன் நல்கண்டே க்ரீஸை விட்டு தள்ளி காலை வைத்ததால் அந்த பந்து நோபாலாக அறிவிக்கப்பட்டது. தலை தப்பியது என ருதுராஜ் கெய்க்வாட்டும் மூச்சு விட்டவாரு மீண்டும் கிரீசுக்கு திரும்பினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அடுத்தடுத்த பந்துகளில் பவுண்டரிகள் அடித்து ருதுராஜ் தனது ஆக்ரோஷமாக ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தற்போது 8 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 65 ரன்களுக்கு விக்கெட் ஏதும் இல்லாமல் விளையாடி வருகிறது. ருத்ராஜ் 36 பந்துகளில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ruturaj Gaikwad has crossed 50 runs while not out


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->