ஓவருக்கு 9 பால், மொத்தம் 39 ரன், தவிடுபொடியான யுவராஜ் சிங்கின் சாதனை!
Samoa Daris Visser T20 one over 39 runs world record
சர்வதேச டி20 ஆட்டங்களில், ஒரு ஓவரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற யுவராஜ் சிங்கின் சாதனையை, சமோவா தீவை சேர்ந்த டேரியஸ் விஸ்ஸெர் என்ற வீரர் முறியடித்து சாதனை படைத்துள்ளார்.
கடந்த 2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராடுக்கு வீசிய ஓவரில், யுவராஜ் சிங் தொடர்ச்சியாக 6 சிக்ஸர்களை அடித்து, ஒரு ஓவரில் 36 ரன்கள் விளாசி சாதனை புரிந்தார்.
யுவராஜ் சிங்கின் இந்த சாதனையை மேற்கிந்தியத் தீவுகளின் கீரன் பொல்லார்ட், நிக்கோலஸ் பூரன், நேபால் தீபேந்திர சிங் ஐரி, மற்றும் ரோஹித் சர்மா-ரிங்கு சிங் ஜோடி ஒரே ஓவரில் 36 ரன்கள் அடித்து சமன் செய்துள்ளது.
(குறிப்பு: மகளிர் டி20 சர்வதேச ஆட்டங்களில் ஒரே ஓவரில் அடித்த அதிகபட்ச ரன் 52 ஆகும். 2023-ல் ஆர்ஜென்டீனாவுக்கு எதிராக சிலி நாட்டு வீராங்கனை புளோரன்சியா மார்டினெஸ் 52 ரன்கள் எடுத்து அசைக்க முடியாத சாதனையை புரிந்துள்ளார்)
இந்நிலையில், இந்த 17 ஆண்டுகால சாதனையை தற்போது சாமோ தீவை சேர்ந்த வீரர் டேரியஸ் விஸ்ஸார் முறியடித்துள்ளார்.
சாமோ தீவின் தலைநகர் அபியாவில் 2026-ம் ஆண்டு டி20 ஆட்டங்களுக்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில், வனுவாட்டு அணியின் வேகப்பந்து வீச்சாளர் நளின் நிபிக்கோ வீசிய ஓவரில் 6 சிக்ஸர், 3 நோ பால் ரன்களுடன் மொத்தம் 39 ரன்கள் (6, 6, 6, 1nb, 6, 0, 1nb, 7nb, 6) விளாசி சாதனை படைத்துள்ளார்.
மேலும், டேரியஸ் விஸ்ஸெர் 14 சிக்ஸர், 5 பௌண்டரிகளுடன் 62 பந்துகளில் 132 ரன்கள் விளாசி, சர்வதேச கிரிக்கெட்டில் சதம் விளாசிய சாமோ தீவை சேர்ந்த முதல் வீரர் என்றச் சாதனைக்கும் படைத்துள்ளார்.
English Summary
Samoa Daris Visser T20 one over 39 runs world record