Samoa's Darius Visser: யுவராஜ் சிங் சாதனையை முறியடித்த சமோவா வீரர்! - Seithipunal
Seithipunal


சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிகபட்சமாக ஒரு ஓவரில் 36 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டு இருக்கிறது. அந்த சாதனையை முறியடித்ததோடு, ஒரே போட்டியில் அதிக சிக்ஸ் அடித்த வீரர் என்ற சாதனையையும் செய்தார் டேரியஸ். வனாட்டு அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை ஈஸ்ட் ஏசியா – பசிபிக் தகுதிச் சுற்றில் சமோவா அணி ஆடியது.

முதலில் பேட்டிங் செய்த சமோவா அணி 20 ஓவர்களில் 174 ரன்கள் குவித்தது. அந்த அணியின் டேரியஸ் விசர் மட்டுமே 132 ரன்கள் சேர்த்தார். டேரியஸ் விசர் அதிரடியாக ஆடி 62 பந்துகளில் 132 ரன்கள் சேர்த்தார்.

5 ஃபோர் மற்றும் 14 சிக்ஸ் அடித்து இருந்தார். இந்தப் போட்டியில் வனாட்டு வீரர் நாலின் நிபிகோ வீசிய 15வது ஓவரில் டேரியஸ் விசர் ஆறு சிக்ஸ் அடித்தார். அந்த ஓவரில் மூன்று நோ பால்களும் வீசப்பட்டன. அந்த ஓவரில் மட்டும் மொத்தம் 39 ரன்கள் கிடைத்தது.

இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் அதிக ரன் எடுத்து சாதனை படைக்கப்பட்டது. இதற்கு முன் ஒரே ஓவரில் 36 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. முதன் முதலாக 2007 டி20 உலகக் கோப்பையில் யுவராஜ் சிங் அந்த சாதனையை செய்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Samoan player who broke Yuvraj Singh's record!


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->