சஞ்சு சாம்சன் ஈகோவுடன் விளையாடி விக்கெட்டை இழந்தார் – கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் விமர்சனம்! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்துக்கு எதிரான T20 தொடரில் 4-1 என இந்திய அணி வெற்றி பெற்றாலும், தொடக்க வீரர் சஞ்சு சாம்சனின் செயல்திறன் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. தென்னாப்பிரிக்க தொடரில் சிறப்பாக விளையாடிய அவர், இத்தொடரில் ஜோப்ரா ஆர்ச்சரின் ஷார்ட் பிட்ச் பந்துகளில் அடுத்தடுத்த முறைகளில் அவுட்டாகினார்.

மறுபுறம், 360 டிகிரி பேட்ஸ்மேன் என அழைக்கப்படும் கேப்டன் சூரியகுமார் யாதவ் பொறுப்பின்றி டாப் எட்ஜ் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இந்த நிலையில், முன்னாள் இந்திய கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், சாம்சன் ஈகோவுடன் விளையாடி விக்கெட்டை பரிசளித்ததாக கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஸ்ரீகாந்தின் கருத்துக்கள்:சஞ்சு சாம்சன் பேருந்தை தவற விட்டுவிட்டார். ஐந்தாவது முறையாக ஒரே மாதிரி அவுட்டாகியிருக்கிறார். அவர் தனது ஈகோவை காட்ட முயற்சிக்கிறார்.ஏன் இந்த ஷாட்டை அடிக்க முடியுமென்று நிரூபிக்க முயற்சிக்கிறார். இது உண்மையிலேயே ஒரு தவறாகும்.சாம்சன் இந்த வேகத்தில் தொடர்ந்தால், மன்னிக்கவும், நன்றி சொல்லிவிட்டு ஜெய்ஸ்வால் துவக்க வீரராக வருவார்.

அதேபோல், சூரியகுமார் யாதவும் தனது கேப்டன் பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டும் என்று அவர் கூறினார்.சூர்யாவின் கடைசி 10 போட்டிகளின் புள்ளிவிவரங்களை பாருங்கள். அவற்றில் எல்லாம் ஒரே மாதிரியான ஷாட்டுகளால் அவுட்டாகியிருக்கிறார்.ஃபிளிக் அடிப்பதில் சிறப்பானவர், ஆனால் அதிக வேகத்தால் தோல்வி அடைகிறார். அவர் ரிலாக்ஸாக விளையாடாமல் வேகமாக அடிக்க முயற்சிக்கிறார்.

இவரது பேச்சு ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பகுப்பாய்வாளர்களிடையே பரவலாக பேசப்படுகிறது. இந்திய அணியின் எதிர்கால ஆட்டக்காரர்கள் யார் என்பது அடுத்த தொடரில் தான் தெளிவாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sanju Samson plays with ego and loses his wicket Krishnamachari Srikanth Review


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->