இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில் 02வது சுற்றுக்கு முன்னேறிய சாத்விக்-சிராக் ஜோடி..!
Satwiksairaj Chirag pair advanced to the second round of the Indonesia Masters badminton tournament
இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் இன்று இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் தொடங்கியது. இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களான சிந்து, மாளவிகா பிரணாய், லக்ஷயா சென் உட்பட பலர் இதில் பங்கேற்கின்றனர்.
போட்டியில்,ஆண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடந்த முதல் போட்டியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் செட்டி ஜோடி, சீன தைபே அணியின் சென் ஸி ரே-லின் யூ சீஹ் ஜோடியை எதிர்கொண்டது.
இதில் ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய சாத்விக்-சிராக் ஜோடி 21-16, 21-15 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
English Summary
Satwiksairaj Chirag pair advanced to the second round of the Indonesia Masters badminton tournament