பாபர் ஆசமுக்கு அந்த தகுதியில்லை – சோயிப் மாலிக் கடும் விமர்சனம்!! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக பாபர் ஆசம் செயல்பட தகுதியில்லை என முன்னாள் கேப்டன் சோயிப் மாலிக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

குஜராத்தில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி படு தோல்வி சந்தித்தற்கு கேப்டன் பாபர் ஆசம் கடுமையயானா விமர்சனத்தை சந்தித்து வருகிறார். இந்நிலையில் தான் சோயிப் மாலிக் இந்த கருத்தை தெரிவித்திருக்கிறார்.

உலகக்கோப்பை தொடர்களில் இது வரை நடைபெற்றபோட்டிகளில் பாகிஸ்தான் அணி தொடர்ந்து 8 ஆவது முறையாக இந்தியாவிடம் தோல்வியடைந்து மோசமான ரிக்கார்டை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள்மோதிய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 42.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 30.3 ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 192 ரன்கள் எடுத்து அபார  வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் அணியின் தோல்வி குறித்து முன்னாள் கேப்டன் சோயிப் மாலிக் அளித்துள்ள பேட்டியில் "மிகவும் நேர்மையாக எனது கருத்தை சொல்லவேண்டும் என்றால் பாபர் ஆசம் கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும். அது சாதாரண பொறுப்பு அல்ல. அதற்கு நிறைய உழைக்க வேண்டும். பேட்ஸ்மேனாக பாபர் ஆசமால் ஏராளமான சாதனைகளை படைக்க முடியும். அந்த வகையில் அவர் அணிக்கு முக்கிய ஆட்டக்காரர்.

இந்தியாவுக்கு எதிரான மோசமான தோல்வியை மட்டும் வைத்து நான் இவ்வாறு கூறவில்லை. பாபர் ஆசம் கேப்டன்ஷிப்பை பேட்டிங் திறமையுடன் சேர்த்து ஒப்பிட்டு குழப்பக் கூடாது. நீண்ட காலமாக அவர் கேப்டன் பொறுப்பில் இருக்கிறார். ஆனால் அவரால் சாதிக்க முடியல்லை" என தெரிவித்த்கதுள்ளர் 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shoaib Malik criticizes Babar Azam as not fit to be captain


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->