இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு.. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் இருந்து முக்கிய வீரர் விலகல்!
Shreyash Iyer ruled out 1st test match against Australia
நியூசிலாந்து அணியுடனான தொடரைத் தொடர்ந்து இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் விளையாட உள்ளது. அதன்படி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இதில், இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 9ம் தேதி நாக்பூரில் தொடங்க உள்ளது.
இந்த நிலையில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் காயம் காரணமாக நியூசிலாந்து தொடரில் முழுவதுமாக விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
![](https://img.seithipunal.com/media/Shreyas 100-ntm7t.jpg)
அவரின் காயம் இன்னும் முழுவதுமாக சரியாக இன்னும் இரண்டு வாரங்கள் தேவைப்படும் என்பதால் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி உள்ளார். உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே 2வது டெஸ்ட் போட்டியில் சேர்க்கப்படுவார். சமீப காலமாக டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் ஸ்ரேயாஸ் ஐயர் விலகி இருப்பது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு அவருக்கு பதிலாக சூரியகுமார் யாதவ் கே.எஸ்.பரத், இஷான் கிஷான் போன்ற வீரர்களில் யாரேனும் ஒருவர் இந்திய அணியில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
English Summary
Shreyash Iyer ruled out 1st test match against Australia