கடந்த மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரர் விருதை கைப்பற்றிய இந்திய வீரர்!
shubman gill select ICC player September month
ஒவ்வொரு மாதமும் ஐசிசி சார்பில் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை தேர்வு செய்து கௌரவிக்கப்படுகிறது.
இதற்கிடையே செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் பெயர்களை ஐசிசி அறிவித்தது.
அந்த பட்டியலில் இந்திய வீரர்களான சுப்மன் கில், முகமது சிராஜ் மற்றும் இங்கிலாந்து வீரரான டேவிட் மலான் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இந்நிலையில் சிராஜ் மற்றும் மலானை பின்னுக்கு தள்ளிவிட்டு செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரராக சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
செப்டம்பர் மாதம் மட்டும் இவர் 80 சராசரியுடன் 480 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீராங்கனையாக இங்கிலாந்து அணி கேப்டன் சமாரி அடப்பட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
English Summary
shubman gill select ICC player September month