சின்க்பீல்ட் செஸ் தொடர் : இந்திய மாஸ்டர்கள் வெற்றி பெறுவார்களா?....தற்போதைய நிலை என்ன? - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் உள்ள செயின்ட் லூயிஸ் நகரில்,இந்த ஆண்டுக்கான கிராண்ட் செஸ் டூரில் கடைசி தொடரான சின்க்பீல்ட் கோப்பை  நடைபெற்று வருகிறது.  

இந்த தொடரில் 10 வீரர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில், 4வது சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, நெதர்லாந்து நாட்டை சேர்ந்த அனிஷ் கிரி உடன் மோதினார். இந்த ஆட்டம் 3வது காய் நகர்த்தலின் போது டிரா ஆனது. தொடர்ந்து 4வது சுற்றின் மற்றொரு ஆட்டத்தில், இந்தியாவின் குகேஷ், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த அலிரேசா பிரோஸ்ஜா உடன் மோதினார்.

இந்த ஆட்டமும் 73வது காய் நகர்த்தலின் போது டிரா ஆனது.இந்நிலையில் 4வது சுற்று ஆட்டம் முடிவில் குகேஷ் 2 புள்ளிகளுடன் 3வது இடத்திலும், பிரக்ஞானந்தா 2 புள்ளிகளுடன் 8வது இடத்திலும் உள்ளனர். தலா 2.5 புள்ளிகளுடன் அமெரிக்காவின் வெஸ்லி சோ, பிரான்சின் அலிரேசா பிரோஸ்ஜா ஆகியோர் முதல் இரு இடங்களில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sinquefield Chess Series Will the Indian Masters win What is the current status


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->