உலக கோப்பையில் இருந்து இலங்கை கேப்டன் திடீர் விலகல்!! தொடர் தோல்வி காரணமாக?
Sri Lanka captain Dasun Shanaka quits from world cup tournament
இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் தசுன் ஷனகா காயம் காரணமாக மீதம் உள்ள போட்டிகளில் விளையாட மாட்டார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆல் ரவுண்டரான கேப்டன் தசுன் ஷனதா விலகி இருப்பது இலங்கை அணிக்கு பின்னடைவு ஏற்படுத்தும் என கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். உலகக்கோப்பை தொடரில் அடுத்த வரும் ஆட்டங்களில் இலங்கை அணியின் கேப்டனாக குசால் மெண்டிஸ் செயல்படுவார் என்று அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. கடந்த 7 ஆம் தேதி நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 102 ரன்கள் வித்தியாசத்திலும், கடந்த 10 ஆம் தேதி நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இலங்கை அணி விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியடைந்ததால் உலகக்கோப்பை தொடருக்கான புள்ளிகள் பட்டியலில்7 ஆவது இடத்தில் உள்ளது. அடுத்து வரும் அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே இலங்கை அணியால் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கேப்டன் தசுன் ஷனகா அணியில் இருந்து காயம் காரணமாக விலகிய நிலையில் அவருக்கு பதிலாக சமிகா கருணாரத்னே அணியில் இடம்பெறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகக்கோபபை தொடருக்கான இலங்கை அணி:
குசல் பெரேரா, பதும் நிஸ்ஸங்கா, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), சதீர சமரவிக்ரமா, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, சமிகா கருணாரத்னே, துனித் வெல்லலகே, மதீஷ பத்திரனா, டில்ஷான் மதுஷங்கா, கசுன் ராஜிதா பெஞ்ச், திமுத் கருணாரத்னா, மஹே தேஷ்ரும் குமாரரத்னே
English Summary
Sri Lanka captain Dasun Shanaka quits from world cup tournament