#SAvsSL: 5 பேர் டக் அவுட்; 42 ரன்களில் சுருண்ட இலங்கை! - Seithipunal
Seithipunal


தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி வெறும் 42 ரன்களுக்குள் ஆட்டமிழந்தது. 

தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி டர்பனில் நவம்பர் 27 அன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, தென்னாப்பிரிக்க அணி முதலில் ஆடியது. 

முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கேப்டன் டெம்பா பவுமா 70 ரன்கள் அடித்து அணியின் முன்னணியாக இருந்தார். அவரைத் தொடர்ந்து கேசவ் மகாராஜ் 24 ரன்கள் எடுத்தார். இலங்கை பந்துவீச்சில் அஷிதா ஃபெர்னாண்டோ, லகிரு குமாரா தலா 3 விக்கெட்டுகள், விஸ்வா ஃபெர்னாண்டோ மற்றும் பிரபாத் ஜெயசூர்யா தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். 

இதனை அடுத்து இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்சை ஆட தொடங்கியது. தென்னாப்பிரிக்க பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை 42 ரன்களில் சுருண்டது. கமிந்து மெண்டிஸ் 13 ரன்களுடன் அதிகபட்சமாக விளையாட, 5 வீரர்கள் டக் அவுட் ஆகினர். டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கை அணியின் மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். 

மார்கோ யான்சென் 7 விக்கெட்டுகள் எடுத்தார். ஜெரால்டு கோட்ஸீ 2 விக்கெட்டுகள், ககிசோ ரபாடா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

தென்னாப்பிரிக்க அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் மூன்று விக்கெட் இழப்பிற்கு, 132 ரன்கள் எடுத்துள்ளது. இன்றைய இரண்டாவது ஆட்ட நேரம் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 281 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sri Lanka South Africa test match Sri Lanka 42 out


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->