சூதாட்ட புகார்! பிரபல கிரிக்கெட் வீரருக்கு நீதிமன்றம் போட்ட தடை உத்தரவு! - Seithipunal
Seithipunal


சூதாட்ட புகாரியில் சிக்கி உள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருக்கு, வெளிநாடுகள் செல்ல தடை விதித்து, கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

38 வயதாகும் சசித்ர சேனநாயகே, கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை இலங்கை அணிக்காக விளையாடி உள்ளார்.

49 ஒரு நாள் மட்டும் டெஸ்ட் ஆட்டங்கள், 24 டி20 ஆட்டங்களில் விளையாடி உள்ள சசித்ர சேனநாயகே, கடந்த 2020 ஆம் ஆண்டு, ஐபிஎல் போன்று இலங்கையில் நடைபெறும் 'இலங்கை பிரிமியர் லீக்' தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இது குறித்த வழக்கை விசாரணை செய்த, அந்நாட்டின் கொழும்பு தலைமை நீதிமன்றம், சசித்ர சேனநாயகே மூன்று மாத காலம் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sri lankan Cricketer ban in Foreign visit


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->