இலங்கை டி20 அணியின் கேப்டன் இவரா: வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து ஜிம்பாப்வே அணி 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடர் வருகின்ற ஜனவரி 8ஆம் தேதி தொடங்க உள்ளது. 

உலக கோப்பையில் மோசமாக விளையாடிய இலங்கை அணி தொடர்ந்து தனது கிரிக்கெட் வாழ்க்கையின் மோசமான நிகழ்வுகளை சந்திக்கிறது. 

தற்போது ஜிம்பாப்வே தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் குஷால் மெண்டிஸ் ஒரு நாள் போட்டிகளுக்கு கேப்டனாகவும், வனிந்து ஹசரங்கா டி20 போட்டிகளுக்கு கேப்டனாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

ஒருநாள் போட்டிக்கான அணியில் கேப்டன் குஷால் மெண்டிஸ், துணை கேப்டன் சரிதா அசலங்கா மற்றும் டி20 அணியில் கேப்டன் வனிந்து ஹசரங்கா, சரிதா அசலங்கா துணைக் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 
 
பேட்டிங் மற்றும் சுழல் பந்தில் அசத்தும் ஹசரங்காவுக்கு தற்போது நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sri Lankan T20 team captain


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->