சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு.. இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஸ்டூவர்ட் பிராட் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் மிக முக்கிய வேகப்பந்து பேச்சாளராக இருப்பவர் ஸ்டூவர்ட் பிராட். இவர் டெஸ்ட் போட்டிகளில் எதிரணியின் பேட்ஸ்மன்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறார். அதன்படி இவரது பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் எதிரணியினர் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்து விடுகின்றனர்.

இந்த நிலையில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல்  4 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் தற்போது ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி ஓவலில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று மூன்றாம் நாள் ஆட்ட நேரம் முடிவில் ஸ்டூவர்ட் பிராட் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் 17 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

ஓய்வு குறித்து பேசிய ஸ்டுவர்ட் பிராட், இது ஒரு அற்புதமான பயணம் நாட்டிங்ஹாம்ஷயர் மற்றும் இங்கிலாந்து பேட்ச் அணிந்திருப்பது ஒரு பெரும் பாக்கியம். நான் எப்போதும் போல் கிரிக்கெட்டை நேசிக்கிறேன். தற்போதைய ஆஷஸ் தொடர் ஒரு அற்புதமான தொடராக அமைந்தது. இந்தத் தொடரில் ஒரு பகுதியாக நானும் இருந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

கடந்த சில நாட்களாகவே ஓய்வு குறித்து யோசித்து வந்தேன். ஆனால் எனக்கு ஆஷஸ் தொடர் மீது தீராக்காதல். அதனால்தான் எனது கடைசி போட்டி ஆஷஸில் இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். ஓய்வு பெறுவதற்கான சரியான நேரம் இதுவே என நான் நினைக்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து பேச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் இதுவரை 167 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 602 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். மேலும், 121 ஒரு நாள் போட்டிகளில் 178 விக்கெட்டுகளும், 56 டி20 போட்டிகளில் 65 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Stuart broad retired from international cricket


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->