பாண்டியா இடத்தை பிடிக்க போகும் தமிழக‌ வீரர்.! ஜாம்பவான் கவாஸ்கர் கணிப்பு.!! - Seithipunal
Seithipunal


2024ம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை நடைபெறவுள்ளது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள 2024ம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் குஜராத் அணியில் கேப்டனாக இருக்கும் ஹார்டிக் பாண்டியாவின் இடத்தை தமிழக வீரர் விஜய் சங்கர் நிரப்புவார் என இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கூறி இருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நடப்பாண்டில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோப்பையை வெல்லும் முனைப்பில் 10 அணிகள் களம் காண இருக்கிறது. அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல், குஜராத் டைட்டன்ஸ், கல்கத்தா நைட் ரைட்ஸ், லக்னோ சூப்பர் செயின்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் களம் இறங்கப் போகிறது.

ஐபிஎல் அணிகளில் பலம்வாய்ந்த அணிகளாக பார்க்கப்பட்ட மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு நிகராக குஜராத் டைட்டன்ஸ் அணியும் திகழ்கிறது. இதற்கு காரணம் 2022ம் ஆண்டில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் அறிமுகமானதோடு கோப்பையை வென்று‌ அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது குஜராத் டைட்டன்ஸ் அணி. இதற்கு ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியே முக்கிய காரணம்.

இந்த ஆண்டு நடைபெறும் ‌17வது சீசனிலும் கோப்பை கைப்பற்றும் என ரசிகர் மனதில் நம்பிக்கை ஏற்படுத்தி இருந்தது குஜராத் டைட்டன்ஸ் அணி. இந்நிலையில் குஜராத் டைட்டன்ஸ் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியதோடு தங்கள் அணியின் கேப்டனாகவும் நியமித்துள்ளது. 

இதனால் குஜராத் அணியில் ஹர்திக் பாண்டியாவை இடத்தை நிரப்பப்போவது யார் என கேள்வி எழுந்தது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்தியா கிரிக்கெட்டின் ஜாம்பவான சுனில் கவாஸ்கர் "தமிழக வீரர் விஜய் சங்கரால் மட்டுமே குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் இடத்தை நிரப்ப முடியும்" என கூறி இருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sunil gavaskar said Vijay Shankar will be full fill hardik Pandiya place


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->