சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்தார் சுனில் நரேன்!! - Seithipunal
Seithipunal


வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிறந்த சுழப்பந்துவீச்சாளர்களில் ஒருவரான சுனில் நரேன் கடந்த 2011 ஆம் ஆண்டு குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் மூலம் சர்வதேச ஒரு நாள் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக அறிமுகப்படுத்தப்பட்டார். 

அவர் தற்போது வரை 65 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 92 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். மேலும் 363 ரன்களை குவித்துள்ள அவர் கடைசியாக கடந்த 2016ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடினார். அதேபோன்று டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடி உள்ள சுனில் நரேன் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் "சர்வதேச போட்டிகளில் இருந்து எனது ஓய்வை அறிவிக்கிறேன். எனது ரசிகர்கள், நண்பர்கள், அன்பிற்குரியவர்கள் அனைவருக்கும் நன்றி. நான் சர்வதேச போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடி 4 ஆண்டுகள் ஆகிறது. இந்த சூழ்நிலையில் தான் எனது ஓய்வை அறிவிக்கிறேன். நான் பிறந்த டிரினிடாட் & டொபாகோவை முன்னிலைப்படுத்த விரும்புகிறேன். அனைவருக்கும் நன்றி" என தெரிவித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sunil Narine announced retirement from international cricket


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->