தியேட்டர்களில் ஒளிபரப்பாகும் டி20 உலகக்கோப்பை.! pvr inox அசத்தல் முடிவு.!
t20 cricket telicost in theaters pvr inox info
இந்தியாவின் மிகப்பெரிய சினிமா ஆபரேட்டரான பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனம், 2024ம் ஆண்டு மார்ச் 31ம் தேதியுடன் நிறைவடைந்த காலாண்டில், ரூ.130 கோடி இழப்பு சந்தித்துள்ளது. அதனால், இந்த இழப்பை ஈடு செய்யும் வகையில், ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முக்கிய போட்டிகளை நேரலையாக திரையிட பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனம் ஆலோசனை செய்து வருகிறது.
இதுதொடர்பாக பிவிஆர் ஐநாக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான நிதின் சூட் பேசியதாவது, இந்த 2024 காலாண்டில் மட்டும் எங்களுக்கு கிட்ட தட்ட ரூ.130 கோடி திரைப்படங்களால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும், இதை சரி கட்ட நாங்கள் கலை நிகழ்ச்சிகள், கச்சேரிகள், விளையாட்டுகள் என்று மாற்று நிகழ்வுகளால் எங்களது போர்ட்ஃபோலியோவை உருவாக்கி வருகிறோம்.
குறிப்பாக இந்தியாவில் 50 ஓவர் போட்டிகளை விட 20 ஓவர் போட்டிகளுக்கு ஈர்ப்பு அதிகமாகவே இருக்கிறது. மேலும், ரசிகர்கள் மைதானத்தில் காணும் சூழலை திரையரங்கியிலும் காண முடியும் எனவும் ஒரு ஊடகமாக மக்களுக்குள் தொடர்புடையதாக இருப்பதே எங்களது மிகப்பெரிய கவனம் என்று தெரிவித்துள்ளார்.
அதாவது, ஐபிஎல் தொடர் முடிவடைந்த ஒரு வாரத்தில் டி20 உலககோப்பை தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் தொடர்ந்து 3 வாரங்கள் நடைபெற உள்ளது, மேலும் அதற்கான ஏற்பாடுகளும் தீவீரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.
English Summary
t20 cricket telicost in theaters pvr inox info