பாக், கேப்டனின் சாதனையை உடைத்தெறிந்த ரோகித் ஷர்மா!  - Seithipunal
Seithipunal


டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணியும், இங்கிலாந்து அணியும் நேற்று மோதின. 

இந்த ஆட்டம் மழை காரணமாக சற்று காலதாமதாகவே தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ய, அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. 

வழக்கம் போல விராட் ஏமாற்றமளிக்க, கேப்டன் ரோஹித் சர்மா தனது அதிரடி ஆட்டத்தால் இந்திய அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தார். இதேபோல் மிடில் ஆர்டரில் களமிறங்கிய சூர்யகுமாரும் 47 ரன்கள் எடுத்து அசத்தினார். 

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழந்து, 171 ரன்கள் எடுத்தது. இதில், ரோகித் சர்மா அதிகபட்சமாக 56 ரன்கள் எடுத்தார்.

இதனையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் வீரர்கள், இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். 

இறுதியில் 16.4 ஓவரில் 103 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்த இங்கிலாந்து அணி படுதோல்வியை சந்தித்தது. இந்த அபார வெற்றியின் மூலம் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

மேலும், இந்த வெற்றியின் மூலம் ரோகித் சர்மா 61 போட்டிகளில் 49-ல் வெற்றி பெற்று, டி20 போட்டிகளில் அதிக வெற்றிகளை குவித்த கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார்.

முன்னதாக கேப்டனாக பாபர் அசாம் 85 போட்டிகளில் 48-ல் வெற்றி பெற்று முதலிடத்தில் இருந்தார். அவரின் இந்த சாதனையை வெறும் 61 போட்டிகளில் 49-ல் வெற்றி பெற்று முறியடித்துள்ளார் ரோகித் சர்மா.

இதேபோல்,, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மஹேந்திரசிங் டோனி 72 டி20 போட்டிகளில் கேப்டனாக இருந்து 41-ல் வெற்றி பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

T20 most victory captain Rohit Sharma


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->