#T20Worldcup: நியூசிலாந்து அணியின் க்ளென் ப்ளிப்ஸ் அதிரடி ஆட்டம் வீண்.. இங்கிலாந்து அசத்தல் வெற்றி.! - Seithipunal
Seithipunal


டி20 உலக கோப்பையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

ஐசிசி 8வது டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில், முதல் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.

டி20 உலக கோப்பை இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில் குரூப் 1 பிரிவில் இடம் பெற்றுள்ள நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற கடும் போட்டி நிலவி வருகிறது. 

இந்த நிலையில் நியூஸிலாந்து - இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் பத்து ஓவர்களில் நிதானமாக விளையாடி விக்கெட் இழப்பின்றி 77 ரன்களை எடுத்தது. அதன் பிறகு சிறப்பாக விளையாடிய பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்களை குவித்தது.

இங்கிலாந்து அணியில் சிறப்பாக விளையாடிய பட்லர்  43 பந்துகளில் 73 ரண்களும், அலெக்ஸ் ஹேல்ஸ் 40 பந்துகளில் 52 ரன்களும் எடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணியில் தனி ஆளாக போராடிய க்ளென் ப்ளிப்ஸ் 36 பந்துகளில் 62 ரன்கள் குவித்தார்.

கட்டாய வெற்றியை நோக்கி  களமிறங்கிய இங்கிலாந்து அணி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் இங்கிலாந்து அணி குரூப் 1 பிரிவு புள்ளி பட்டியலில் 5 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

T20 World Cup England won by 20 runs against newzealand


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->