#BREAKING | ஒரு பாலுக்கு ஒரு ரன் - இந்திய அணி திரில் வெற்றி! - Seithipunal
Seithipunal



டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் : சூப்பர் 12 லீக் சுற்றில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் இன்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பந்து வீசியது. ஆட்டத்தில் முதல் பந்திலேயே கேப்டன் பாபர் அசாம் டக் அவுட்டாகி வெளியேறினார். 

அவரை தொடர்ந்து ரிஸ்வானை 4 ரன்னில் அவுட்டாக்கினார். தொடர்ந்து ஷான் மசூத், இப்திகார் அகமது ஜோடி சேர்ந்து றன் குவிப்பில் ஈடுபட்டனர். இதில், இப்திகார் அகமது 34 பந்தில் 51 ரன் குவித்து ஆட்டமிழந்தார். ஷான் மசூத் 52 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். 

இறுதியில், பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, கடைசி பந்தில் திரில் வெற்றியை பெற்றது.

இந்திய அணி தரப்பில், விராட் கோலியின் அதிரடி ஆட்டம் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

T20 World cup INDvPAK 2022


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->