சொந்த மண்ணில் மண்ணை கவ்விய ஆஸ்திரேலியா.. அரையிறுக்கு முன்னேறிய முதல் 2 அணிகள் எவை.? - Seithipunal
Seithipunal


டி20 உலக கோப்பையில் குரூப் 1 பிரிவில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

ஐசிசி 8வது டி20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில், முதல் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.

டி20 உலக கோப்பை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் குரூப் 1 பிரிவில் இடம் பெற்றுள்ள நியூசிலாந்து இங்கிலாந்து ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகளுக்கு இடையே அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற கடும் போட்டி நிலவியது.

இந்த நிலையில் தற்போது குரூப்-1 பிரிவு சூப்பர் 12 போட்டிகள் இன்றுடன் நிறைவடைந்தது. இதில், நியூஸிலாந்து, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகளும் தலா 7 புள்ளிகளை பெற்றிருந்தது. 

ஆனால், நெட் ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. ஆஸ்திரேலியா அணி உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியுள்ளது‌.

டி20 உலக கோப்பையில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் விளையாடியதால் அந்த அணி மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறியது கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

மேலும், குரூப் 2 பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற கடும் போட்டி நிலவி வருகிறது. இதில் நாளை நடைபெறும் போட்டிகளை பொறுத்துதான் எந்த 2 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

T20 World Cup newzealand and England qualify semifinal


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->