ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை: வெற்றியின் அருகில் இந்திய அணி! 82 ரன்களுக்கு ஆட்டமிழந்த தென்னாப்பிரிக்கா!
t20 world cup under 19 women's final scorecard
மலேசியாவில் நடைபெறும் ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 82 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதன் மூலம் இந்திய அணிக்கு வெற்றி பெற 83 ரன்கள் என்ற எளிதான இலக்கு கிடைத்துள்ளது.
முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி வீராங்கனைகள், இந்திய ஸ்பின்னர்களின் நேர்த்தியான பந்து வீச்சால் நிலைகுலைந்து அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
குறிப்பாக, இந்திய அணியின் கொங்கடி த்ரிஷா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இதனையடுத்து 83 ரன்கள் அடித்தல் வெற்றியுடன் உலக்கோப்பையும் வெல்லலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, தற்போதுவரை 7 ஓவர்களில், ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து, 47 ரன்களை எடுத்துள்ளது.
இதன் மூலம் கிட்டத்தட்ட இந்திய அணியின் வெற்றி உறுதியாகியுள்ளது என்றுதான் சொல்லவேண்டும்.
English Summary
t20 world cup under 19 women's final scorecard